Friday, April 18, 2025

எம்புரான் பட இயக்குனர் பிரித்விராஜூக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

பிருத்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று வெளியானது. இந்த திரைப்படம், மிக விரைவாக 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளால் சர்ச்சையில் சிக்கியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில், எம்புரான் படத்தின் இயக்குநர் பிரித்விராஜூக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் கோல்டு, ஜன கண மன, கடுவ ஆகிய படங்களை தயாரித்த பிரத்விராஜ், இதன் மூலம் கிடைத்த வருமானம் தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Latest news