Thursday, April 10, 2025

சத்தியம் தொலைக்காட்சி செய்தியின் எதிரொலி : தபால் பெட்டியில் சேர்க்கப்பட்ட தமிழ் மொழி

நெல்லையில், சத்தியம் தொலைக்காட்சி எதிரொளியால் தபால் பெட்டிகளில் தமிழ் மொழியையும் சேர்த்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லையில், தலைமை தபால் அலுவலகம் உட்பட சில தபால் அலுவலகங்களில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்கள் மட்டுமே தபால் சேகரிப்பு பெட்டிகளில் இடம் பெற்றிருந்தது.

இது குறித்த செய்தி நம் சத்தியம் தொலைக்காட்சியில் விரிவாக வெளியானது. இதனை அடுத்து மத்திய அரசின் தபால் துறை சார்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்று தபால் பெட்டிகள் அனைத்திலும் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது.

Latest news