மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.