Saturday, April 5, 2025

வீடு வீடாக காலிங் பெல் அடித்து செயின் பறிக்க முயன்ற மர்ம நபர்

சென்னை வானகரம் அடுத்த அடையாளம் பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பு முயற்சி ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது மாடியில் வசித்து வரும் மோனிஷா (43) என்ற பெண்ணிடம் நேற்று இரவு மர்மநபர் ஒருவர் செயின் பறிக்க முயன்றுள்ளார். வீட்டின் காலிங் பெல் தொடர்ந்து அடித்தும் கதவைத் தட்டியும் அப்பெண்ணை வெளியே வரவழைத்து வலுக்கட்டாயமாக செயின் பறிக்க முயற்சி செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வானகரம் போலீசார், செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சதீஷ் என்கின்ற சச்சின் என்பவரை கைது செய்துள்ளனர்.

Latest news