Saturday, April 5, 2025

மியான்மர் நிலநடுக்கம் : 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி

மியான்மர் நிலநடுக்கத்தில் ,இடிபாடுகளில் சிக்கிய 63 வயது மூதாட்டி ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டடங்கள் அனைத்தும் உருக்குலைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் நிலநடுக்கம் ஏற்பட்ட நகரங்களில் மீட்பு பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கிய 63 வயது மூதாட்டி ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கபட்டிருக்கும் நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Latest news