2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்த தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதிமுக பாஜக கூட்டணிகுறித்து பேசியதாக தகவல் பரவியது.
இதையடுத்து விரைவில் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இன்னொருபுறம் தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை நீக்கப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த பரபரப்பான சூழலில் பரமக்குடியில் பா.ஜ.கவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் “அண்ணாமலை வேண்டும். அதிமுக கூட்டணி வேண்டாம்” என அச்சடிக்கப்பட்டுள்ளது.