ஹைதராபாத்தை விட்டு வெளியேறி, வேறு மைதானத்தில் விளையாடிக் கொள்கிறோம் என, SRH பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
IPL தொடரின் வலிமையான அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஒன்று. நடப்பு தொடரில் நிச்சயம் 300 ரன்களை எட்டும் அணியாகக் கருதப்படும் அந்த அணி, அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தநிலையில் HCA எனப்படும் Hyderabad Cricket Associationக்கும், Sunrisers Hyderabad அணிக்கும் இடையே பிரச்சினை வெடித்துள்ளது. இதுகுறித்து SRH General Manager, Srinath TB பொருளாளர் CJ Srinivas Raoவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,” ஒவ்வொரு போட்டியின் போதும் HCAவான உங்களுக்கு, 50 இலவச டிக்கெட்டுகள் வழங்குகிறோம். லக்னோ – ஹைதராபாத் இடையிலான போட்டியின்போது 30 டிக்கெட்டுகளை ஒரு பாக்ஸிலும், 20 டிக்கெட்டுகளை வேறு பாக்ஸிலும் வழங்கும்படி கோரிக்கை வைத்தீர்கள்.
இதற்கு நாங்கள் இணங்காததால் மைதானத்தின் F3 பாக்ஸை இழுத்துப்பூட்டி விட்டீர்கள். மைதானத்திற்கு நாங்கள் வாடகை அளிக்கிறோம். IPL தொடரின்போது மொத்த மைதானமும், எங்களது கட்டுப்பாட்டுக்குள் தான் வரும்.
ஆனால் இலவச டிக்கெட்டுகளுக்காக, நீங்கள் இப்படி செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக HCA தரப்பில் இருந்து எங்களுக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளன. தற்போது எல்லைமீறி நடந்து கொண்டு இருக்கிறீர்கள். நமக்கு இடையிலான ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு, உங்களுக்கு இலவச டிக்கெட்டுகள் அளிக்கப்படும்.
விரைவில் இதுகுறித்து ஒரு முறையான கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்யும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்த மிரட்டல்கள் அனைத்துமே நாங்கள் இங்கு விளையாடுவதை, நீங்கள் விரும்பவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
இதை எழுத்துப்பூர்வமாக தெரிவித்து விட்டால் நாங்கள் BCCI, தெலுங்கானா அரசு மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து, வேறு மைதானத்திற்கு மாறிக்கொள்வோம்,” இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தற்போது தெலங்கானாவில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஈடன் கார்டன் மைதான Pitchஐ தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்காததால், கொல்கத்தாவை விட்டு வெளியேறப்போவதாக அண்மையில் KKR சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்த வரிசையில் தற்போது SRHம் இணைந்திருப்பதால், வரும் நாட்களில் மேற்கண்ட அணிகளின் Home Ground மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.