Sunday, April 20, 2025

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபரை கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த 95 வயது மூதாட்டியை தாக்கி அசோக் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் திருடிச் சென்றுள்ளார்.

இதையடுத்து காடுவெட்டான்குறிச்சி கிராமத்தில் சுற்றி திரிந்த அசோக்கை பிடித்த கிராம மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீசார் அசோக்கை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news