மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில். சா்க்கரை ஆலைகள் ஏப்ரல் மாதம் முதல் மாதம்தோறும் 23.5 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே சா்க்கரை இருப்பு வைக்க வேண்டும் என்று விதி அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை உயா்வுக்கு வழி வகுப்பதைத் தடுக்கவே இந்த விதி வகுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, இருப்பு விதிகளை ஆலைகள் மீறினால், அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் ஆலைகளில் இருந்து எத்தனால் கொள்முதல் செய்யும் அளவையும் அரசு குறைத்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.