புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
நோன்பு காலத்தின்போது சிறைக் கைதிகளில் சிலரை மனிதாபிமான அடிப்படையிலும் கருணையின் அடிப்படையிலும் விடுதலை செய்யும் பாரம்பரியத்தை ஐக்கிய அரபு சிற்றரசுகள் நிர்வாகம் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிறது.