சென்னையில் நேற்று இரவு அண்ணா சாலை, தேனாம்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க முயன்ற தேனாம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போக்குவரத்துக் காவலர் ரோகித் ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
போலீசாரின் தீவிர நடவடிக்கையால் பைக் ரேஸில் ஈடுபட்ட சில இளைஞர்களை சுற்றி வளைக்கப்பட்டு காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டது. இதில் 35க்கும் மேற்பட்ட இளைஞர்களை சிறை பிடித்த போலீசார் 25 விலை உயர்ந்த பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கும்பல் நம்பர் பிளேட்டுகளில் துணி வைத்து மறைத்தும், நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்துவிட்டு பைக் ரேஸ் களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.