Tuesday, April 1, 2025

டெஸ்லாவுக்கு பேரதிர்ச்சி கொடுத்த சீன நிறுவனம்

சீனாவின் மின்சார வாகன நிறுவனமான BYD, 2024 ஆம் ஆண்டில் $107 பில்லியன் வருமானத்தைப் பதிவு செய்து, அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தை முந்தியுள்ளது. இந்த சாதனை, BYD நிறுவனத்தின் ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட 29% வளர்ச்சியின் விளைவாகும்.

BYD தனது புதிய “சூப்பர் இ-ப்ளாட்ஃபார்ம்” சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வெறும் 5 நிமிடங்களில் 400 கி.மீ பயணிக்க தேவையான மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டது. இந்த முன்னேற்றம், மின்சார வாகன சந்தையில் டெஸ்லாவுக்கு கடுமையான போட்டியை உருவாகியுள்ளது.

Latest news