கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் சுமார் 2.16 கோடி பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளதை இந்திய ரயில்வே கண்டறிந்துள்ளது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.