பப்புவா நியூ கினியா நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. இங்கு சுமார் 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்குள்ள மக்கள் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன. பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர். இது மக்களின் கருது சுதந்திரத்தை பறிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.