”லோக்சபாவில் என்னை பேச அனுமதிக்கவில்லை”, என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். அதேநேரத்தில் அவையில் விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது : லோக்சபாவில் பேசுவதற்கு நான் வாய்ப்பு கேட்டேன். ஆனால், வாய்ப்பு வழங்காமல் கிளம்பி சென்று விட்டார். லோக்சபாவில் பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்குவது வழக்கம். எப்போது எல்லாம் நான் எழுந்து நின்றாலும், நான் பேசுவதை தடுக்கின்றனர்.
7-8 நாட்களாக பேச அனுமதிக்கப்படவில்லை. இங்கு ஜனநாயகத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடமில்லை. மஹா கும்பமேளா குறித்தும், வேலைவாய்ப்பின்மை குறித்தும் பேச விரும்பினேன். ஆனால் அனுமதிக்கப்படவில்லை.” என கூறினார்.