Sunday, April 20, 2025

மைதானத்திலேயே ‘வெடித்த’ கோயங்கா பறிபோகும் Pantன் ‘கேப்டன்’ பதவி?

டெல்லி அணியுடனான தோல்விக்கு பின் ரிஷப் பண்ட் மீது, LSG அணி ரசிகர்கள் தொடர்ச்சியாக வன்மத்தைக் கக்கி வருகின்றனர். மார்ச் 24ம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி-லக்னோ இடையிலான ஆட்டம், நல்லதொரு திரில்லர் படத்திற்கு இணையாக இருந்தது.

குறிப்பாக சரிவில் இருந்து டெல்லி மீண்டவிதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு Full Meals விருந்தாக அமைந்தது. இதில் தன்னுடைய எக்ஸ் அணியை எதிர்த்து ஆடிய கேப்டன் ரிஷப் பண்ட், மோஹித் சர்மாவை ஸ்டெம்பிங் செய்து வெற்றியை தக்கவைத்துக்கொள்ள தவறி விட்டார்.

இது தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. போட்டி முடிந்ததும் அணி உரிமையாளர் கோயங்கா மைதானத்தில் வைத்தே, ரிஷப்பிடம் கடுமையாக பேசினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக, இதைப்பார்த்த ரசிகர்கள், ”கேஎல் ராகுலையும் இப்படித்தான் அவமானப் படுத்துனாரு. இப்போ Pantயும் விட்டு வைக்கலயா?,” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அணியின் துணை பயிற்சியாளர் Lance Klusener, பண்ட் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்மையில் அளித்த பேட்டியில், ”பேட்டிங்கில் மிகப்பெரும் தவறு இருந்தது. இன்னும் கூடுதலாக 20-30 ரன்களை இந்த பிட்சில் அடித்திருக்க முடியும்.

அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அபாரமாக செயல்பட்டனர். இதனால், பெரிய ஸ்கோர் வரும் என நினைத்தேன். ஆனால், மிடில் வரிசை பேட்டர்கள் படுமோசமாக சொதப்பி விட்டனர்,” என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணியின் ஸ்கோர் 160 ரன்களாக இருந்தது. ஆனால் அடுத்த 7 ஓவர்களில் கூடுதலாக, 49 ரன்களையே அவர்களால் எடுக்க முடிந்தது. 6 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் Pant, டக்அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

இதை சுட்டிக்காட்டி தான் துணை பயிற்சியாளர் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். IPL ஏலத்தில் அதிகபட்சமான 27 கோடி ரூபாயைக் கொடுத்து, ரிஷப்பினை லக்னோ வாங்கியுள்ளது. முதல் போட்டியில் இவ்வளவு ரன்கள் அடித்தும் தோல்வியைத் தழுவியதால், ரிஷப் மீதான அழுத்தம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே பண்ட் இப்படி தொடர்ந்து சொதப்பினால், அவரின் கேப்டன் பதவியை பறித்து வேறொருவருக்கு கொடுக்கவும் LSG நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம். எனவே விரைவில் ஒரு கேப்டன் மாற்றம், இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Latest news