நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடும்போ நந்தி தைத்வா (72) நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 58% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பதவியேற்பு விழாவில், முன்னாள் அதிபர் நங்கோலா பும்பா அதிகாரத்தை நந்தி தைத்வாவிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தான்சானியாவின் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம், நமீபியாவின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெண் அதிபர் என்ற பெருமையை நந்தி தைத்வா பெற்றுள்ளார்.