தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது’ என பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது எனவும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்று கூறி சிக்கலை திமுக திசை திருப்புகிறது.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் உள்ளது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் தி.மு.க., அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனிமேலாவது உறக்கத்தைக் கலைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.