Tuesday, April 22, 2025

முஸ்லீம் பெயரை பார்த்து கொந்தளித்த எச்.ராஜாவை நோஸ் கட் செய்த நபர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு நர்கிஸ்கான் என்கிற முஸ்லிம் ஒருவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை பார்த்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை, இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!! என கூறியுள்ளார்.

யார் இந்த நர்கிஸ்கான்?

அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கானின் தந்தை பெயர் தங்கராஜ். அவர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள்” என்று கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வதந்தியைப் பரப்பாதீர்! எனவும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news