இன்னும் ஒரு கோப்பை கூட வெல்லாத பெங்களூரு அணி, 5 கோப்பைகளுக்கு அதிபதியான மும்பையை Wanted ஆக வம்பிழுத்து, வாங்கிக்கட்டிக்கொண்டு வருகிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
கடந்த 2024ம் ஆண்டு IPL தொடரின் பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டும் தங்களின் புதிய கேப்டனை அறிவித்தன. நீண்டகாலமாக அணியை வழிநடத்தி வந்த மகேந்திர சிங் தோனி ‘எங்களோட அடுத்த ராஜா’ ருதுராஜ் தான், என்று சுமூகமாக அறிவித்து விட்டார்.
ஆனால் மும்பை அணியின் கேப்டன் மாற்றம், பல்வேறு அடிதடி சண்டைகளுக்கு பிறகே நடைபெற்றது. ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்ததை, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவே ஏற்கவில்லை. இதன் விளைவாக அணிக்குள் பிளவு ஏற்பட்டு, பிளே ஆப்க்கு முன்னேறாமலேயே மும்பை தொடரை விட்டு வெளியேறியது.
இதேபோல நடப்பு IPL தொடரில் பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி, தங்களது புது கேப்டனாக ரஜத் படிதாரை அறிவித்துள்ளது. அண்மையில் RCB கேப்டன் ரஜத் Influencer Nagsக்கு பேட்டியளித்தார். அப்போது, ”புது கேப்டனான உங்களுக்கு முன்னாள் கேப்டன்கள் Faf Du Plessis, Virat Kohli இருவரும் வாழ்த்து மெசேஜ் அனுப்பினார்கள்.
இந்த விஷயத்தை மற்ற அணிகளும் பாலோ செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ரஜத், ”என்ன நடக்கிறது, அடுத்து என்ன நடக்கப் போகிறது ஆகியவற்றை நான் பின்தொடர்வதில்லை,” என்றார்.
உங்களுக்கு உண்மையிலேயே தெரியாது? என்று Nags மீண்டும் கேள்வியெழுப்ப, ரஜத், ”ஆமாம்” என்று பதில் அளித்தார். ஆனால் Nags இந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிடவில்லை. ”பிறகு நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்” என்று ரஜத்தை மடக்கினார். என்றாலும் Nagsன் தூண்டிலில் சிக்காமல், ரஜத் எஸ்கேப் ஆகிவிட்டார்.
இந்த வீடியோவை RCB தங்களது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், ”இதெல்லாம் தேவை இல்லாத விஷயம். மொதல்ல கோப்பையை வெல்றதுக்கு வழியை பாருங்க,” என்று பெங்களூரு அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதனால் IPL ஆரம்பிக்கும் முன்னரே, பெங்களூரு-மும்பை அணிகளுக்கு இடையில் உரசல் நிகழ்ந்துள்ளது. மும்பை இதை கண்டும், காணாமல் கடந்து செல்லுமா? இல்லை காத்திருந்து பழி வாங்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.