Tuesday, April 22, 2025

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள் அவதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், இன்று காலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பிரைன் நகர், முத்தம்மாள் காலனி, திரேஸ்புரம், தாளமுத்து நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது.

குறிப்பாக அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால், நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Latest news