திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற 7 பேரை மடக்கிப்பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். இதேபோல் பழனி மதனபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.