முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்ததன் பேரில், இன்று (மார்ச் 22) சென்னையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டுக் நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.











