Sunday, April 20, 2025

மத்திய அரசு விதித்த கெடு! உடனடியாக உங்கள் ஆதார் எண்ணில் இதை செய்யுங்கள் ! இல்லையென்றால்?

ஆதார் என்பது இந்தியர்களின் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசு சேவைகள் அனைத்தையும் பெறுவதற்கு ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதார் அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்வதன் முக்கியத்துவம் என்ன என்பதை ஒவ்வொரும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

ஆதார் எண் ஒவ்வொரு நபரின் தனித்துவமான அடையாளமாக விளங்குகிறது. இது மட்டுமின்றி, வங்கி கணக்குகள், ரேஷன் கார்டுகள் மற்றும் பல சான்றிதழ்களுடன் இணைக்கப்பட்டு பயன்படுகிறது. அதனால், ஆதார் எண் தொடர்புடைய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படாமல் இருக்க, 10 வருடத்திற்கு ஒருமுறை ஆதார் புதுப்பிக்க வேண்டும்.

அதன் முக்கியத்துவம், உங்கள் ஆதார் எண் இன்னும் செயல்படும் வகையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த புதுப்பிப்பு அவசியமாகிறது. குறிப்பாக, நாம் ஆதார் வங்கி, ரேஷன் கார்டு போன்ற பல சேவைகளுடன் இணைத்திருப்பதால், புதுப்பிக்காத ஆதார் மூலம் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். ஆகவே, 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் புதுப்பிப்பது மிகவும் அவசியம்.

ஆதார் புதுப்பிப்பதை இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேவை மையம் மூலம் செய்யலாம். இதன் மூலம், நீங்கள் உங்கள் ஆதார் வீட்டிலிருந்தே இணையதளத்தை பயன்படுத்தி புதுப்பிக்க முடியும். டிசம்பர் 12 வரை இணையதளத்தில் இலவசமாக ஆதார் புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது.

ஆதார் புதுப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்:

1.வங்கிப் புத்தகம்

2.வாக்காளர் அட்டை

3.பான் கார்டு

4.ரேஷன் கார்டு

இணையவழியாக ஆதார் புதுப்பிக்க இலவசம். ஆனால், நீங்கள் நிரந்தர ஆதார் சேவை மையத்தில் புதுப்பித்தால், ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு, சிலர் புதுப்பித்தவுடன் புதிய ஆதார் அட்டை கிடைக்கும் என்று நினைப்பது தவறு. ஆதார் புதுப்பித்தவுடன், உங்கள் முகவரி அல்லது பெயர் மாற்றங்கள் ஆன்லைனில் அப்டேட் செய்யப்படும், ஆனால் பழைய ஆதார் அட்டையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவையனைத்தும், 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் புதுப்பிப்பது அவசியம் என்பதை புரிந்துகொள்வது முக்கியம்.

Latest news