கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அப்போது அவர் மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்வபம் தொடர்பாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான விஜயராணி மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ராமகிருஷ்ணனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.