Tuesday, April 22, 2025

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ. 1,000 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

மார்ச் 25ஆம் தேதிக்குள் குற்றம் நடைபெற்றதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை டாஸ்மாக் வழக்கில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.

Latest news