மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு பகுதியில் கடந்த 16ஆம் தேதி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆட்டோ இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை குடிபோதையில் இளைஞர்கள் சேதப்படுத்தினர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் CCTV காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்திபுரத்தைச் சேர்ந்த வீரபாண்டி (25), சூர்யா (22) ஆகிய இருவரையும் போலீசார் பிடிக்க முயன்ற போது வீரபாண்டிக்கும் சூர்யாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.