Wednesday, January 14, 2026

“நாங்க என்ன பயங்கரவாதியா? எங்களை ஏன் தடுக்குறீங்க?” – எச்.ராஜா ஆவேசம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாஜக நிர்வாகி ஒருவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்றார். அப்போது அங்கு வந்த இளையான்குடி போலீசார் எச்.ராஜாவை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, நாங்கள் என்ன பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தர்களா ? எதற்கு எங்களை தடுக்குறீர்கள் என்று எச்.ராஜா ஆவேசமாக கூறினார். இதன் காரணமாக அங்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து எச்.ராஜாவை செல்ல போலீசார் அனுமதித்தனர்.

Related News

Latest News