கர்நாடக மாநிலத்தில் கொலை செய்வது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்து பொதுமக்களை அலறவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவில் கலபுரகி மாவட்டத்தில் ரோட்டில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஒருவர் படுத்திருக்கிறார். அவரின் மீது ஏறி உட்கார்ந்த மற்றொருவர் முகம் முழுவதும் ரத்தத்தை பூசியவாறு கத்தியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை இது குறித்து விசாரித்த போது அந்த 2 பேரும் ரீல்ஸ் வீடியோவுக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர். உடனடியாக, அவர்களை இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் சாய்பன்னா, சச்சின் என்பது தெரிந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.