பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும். அவ்வாறு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.