அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் எடுத்த இரண்டு முக்கிய முடிவால் இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால் இந்தியர்கள் அங்கே ஆன்சைட் வேலைகளுக்கு செல்வது கடினமாகியுள்ளது.
H.1 B விசா உள்ளிட்ட விசாவின் Renewal காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளதையடுத்து அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால் 540 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை.
தற்போது எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் Renewal காலத்தை குறைத்து 180 நாட்களாக டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால் இனிமேல் 180 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும் என்று டிரம்ப் புதிய விதி கொண்டு வந்துள்ளதால் அங்கே விசா பெறுவது கடினம் ஆகி உள்ளது.
இரண்டாவதாக என்ன நடந்தாலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிக்காமல் விட மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். “வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிக்காமல் விட மாட்டேன், கண்டிப்பாக வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிப்பேன். அமெரிக்கா மீது கூடுதல் வரி விதிக்கும் நாடுகள் மீது நாங்களும் வரி விதைப்போம். ஏப்ரல் 2 வரைதான் டைம். அதற்குள் வரியை குறைக்காத நாடுகள் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான வரிகளை விதைப்போம்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.