நடந்து முடிந்த Champions Trophy தொடரால், இனி மீளவே முடியாது என்னும் நிலைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டு இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம். 1996ம் ஆண்டுக்கு பிறகு இந்த 2025ம் ஆண்டில் தான், PCB எனப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும், ICC தொடரினை நடத்தியது.
ஆனால் இதை நடத்தியதற்கு அவர்கள் சும்மாவே இருந்திருக்கலாம். ஏனெனில் உங்கள் நாட்டில் வந்து விளையாட மாட்டோம் என கடைசிவரை, இந்திய அணி அடம்பிடித்து அதில் வெற்றியும் பெற்றதால், பாகிஸ்தானின் நிலைமை பரிதாபமாக மாறிவிட்டது.
ஏனெனில் இந்த தொடருக்காக ராவல்பிண்டி, கராச்சி, லாகூர் மைதானங்களை அவர்கள், மிகுந்த பொருட்செலவில் சீரமைத்து இருந்தனர். மொத்தமாக இந்த தொடருக்கென பாகிஸ்தான் 869 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.
ஆனால் டிக்கெட் கட்டணம்,விளம்பரங்கள் மற்றும் தொடரை நடத்தியதற்காக, ICCயிடம் இருந்து பெற்ற தொகை எல்லாம் சேர்த்து, மொத்த வருமானம் 50 கோடி ரூபாயைத் தாண்டவில்லையாம். இதெல்லாம் கூட போனால் போகிறது என்று விட்டு விடலாம்.
மழையின் காரணமாக 3 போட்டிகள் கைவிடப்பட்டதால், நியூசிலாந்து உடனான ஒரேயொரு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் விளையாடியது. இதன் காரணமாக 869 கோடி ரூபாய் செலவழித்தும், ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடிய அணி, என்ற மோசமான சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.
இதனால் தற்போது கடும் நெருக்கடியில் PCB சிக்கித் தவித்து வருகிறது. அதாவது T20 தொடரில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு, ஊதியத்தை 90 சதவீதம் குறைத்து வழங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதாம்.
அடுத்தடுத்து விழுந்த இந்த அடிகளால், ஒருகாலத்தில் 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்கிய பாகிஸ்தான் வீரர்கள், தற்போது பட்ஜெட் ஹோட்டல்களில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, இந்த பேரழிவில் இருந்து மீள்வதற்கு, இன்னும் பல ஆண்டுகளாவது பாகிஸ்தானுக்குத் தேவைப்படும், என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.