Sunday, April 20, 2025

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் நோட் பண்ணுங்க! ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

ரேஷன் கடை பணியாளர்களின் சம்பளத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்களுக்கு நிகராக இருப்பதில்லை என்று ஊதிய உயர்வு உள்பட அனைத்துமே அவர்களுக்கு சொல்லும்படி இல்லை என்ற உறுத்தல் இருப்பதால் ரேஷன் கடை பணியாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் புதிதாக ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33 ஆயிரத்து 377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்பட்டு வருவதோடு இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18 ஆயிரத்து 782. பகுதி நேர ரேஷன் கடைகள் 9 ஆயிரத்து 388. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரமாக 4 ஆயிரத்து 352 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றதாகவும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று அந்தந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் கூடி விற்பனை கருவி அதாவது பாய்ண்ட் ஆப் சேல்ஸ் செயல்பாடு, எடை தராசு இணைப்பு குறித்து மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்க உள்ளதாகவும்…

மேலும், வருகிற 24ம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து கருப்பு உடையுடன் பொருட்கள் வாங்க வரும் ரேஷன் அட்டைதாரர்களிடம் எங்களின் நியாயமான கோரிக்கைகளைப் பற்றி எடுத்து சொல்லவிருப்பதாகவும் ஏப்ரல் 3ம் தேதி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 5 அட்டைதாரர்களுக்கு மட்டும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும்

அதனையடுத்து ஏப்ரல் 11ம் தேதி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்ட பின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத நிலையில் மே 2ம் தேதி முதல் ரேஷன் கடைகள் திறந்திருந்தாலும் பொருட்கள் எதுவும் வழங்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news