பெங்களூருவில் ரயில் பயணி ஒருவா், ரயிலுக்குள்ளேயெ சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூரு வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயிலில் 40 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், குடிபோதையில் அங்கிருந்த இருக்கைகள் மீது சிறுநீர் கழித்தார்.
இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.