மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியட்நாமுக்கு அடிக்கடி செல்வது ஏன் என பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததற்காக நாடே துயரத்தில் இருக்கும்போது, ராகுல் காந்தி புத்தாண்டை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார்” என பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறியிருந்தார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “புத்தாண்டின்போது வியட்நாம் சென்றிருந்த ராகுல் காந்தி, ஹோலி பண்டிகையை முன்னிட்டு அந்த நாட்டுக்கு சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் தனது தொகுதியைவிட வியட்நாமில் அதிக நேரம் செலவிடுகிறார். வியட்நாம் மீதான பாசம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.