விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் : அமலாக்கத்துறை சொல்வதெல்லாம் உண்மை என்றால் அண்ணாமலை சொல்வதெல்லாம் உண்மைன்னு அர்த்தமா? அண்ணாமலையும் அமலாக்கத்துறை ஒரே பார்வையாக இருப்பவர்கள். அண்ணாமலை என்ன சொல்கிறாரோ அதை அமலாக்கத்துறை சொல்லும். உடனே அண்ணாமலை போராட்டம் பண்ணுவார்.
குஜராத்தில் அமலாக்கத்துறை போகவில்லை. மத்திய பிரதேசத்தில் வீடியோ போகவில்லை. பாஜக ஆளுகின்ற மற்ற மாநிலங்களுக்கு அமலாக்கத்துறைக்கு வழி தெரியவில்லை . ஆனால் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாத்திற்கும் எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களுக்கு மட்டும் வழி தெரிகிறது.
பாஜகவின் பிடியில் அமலாக்கத்துறை சிக்கி தவிக்கிறது அமலாக்கத்துறை தனது நடுநிலையை இழந்து பல வருடங்கள் ஆகிறது. பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது.