ஐபிஎல் 18வது சீசன், வருகின்ற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள பும்ரா, கடந்த ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் போது முதுகில் காயமடைந்தார்.
காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் தொடக்கக்கட்ட ஆட்டங்களில் அவர் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.