இன்றைய காலத்தில் செல்போன் என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் அதிக நேரம் சார்ஜிங்கில் இருந்தால் என்ன ஆகும்? என்ற கேள்வி பெரும்பாலான நபர்களுக்கு எழுந்திருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான நபர்கள் செல்போன் பேட்டரிக்கு 100 சதவீதம் வரை சார்ஜ் செய்வார்கள். இன்னும் சிலர் 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பின்பும் நீண்ட நேரம் அப்படியே வைத்து விடுகின்றனர். இவை பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும்.
ஓவர் சார்ஜிங் செய்வது பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடுமாம். எனவே செல்போனின் பேட்டரியை பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். செல்போனின் பேட்டரியை தொடர்ந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யாமல், 60 சதவீதம் அல்லது 80 சதவீதம் சார்ஜ் செய்வது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
சில நேரங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்தால் பிரச்சனை இல்லை. ஆனால் வழக்கமாக, செல்போனை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துகொண்டு பயன்படுத்துவது சிறந்தது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.