தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
- பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
- நவீன வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து செயல்படுவோருக்கு முதல் பரிசு ரூ.2.5 லட்சம்.
- இயற்கை வேளாண் பொருளை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசு சந்தைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 63 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
- 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
- 35 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு வசதி செய்ய ரூ.841 கோடி நிதி ஒதுக்கீடு.
- விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
- 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு.
- டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு.
- தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு.
- 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு
- ரூ.269 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.
- 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
- சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு.
- மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தி 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு.
- பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
- மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.8.59 கோடி நிதி ஒதுக்கீடு
- வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
- நறுமண ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
- மல்லிகை உற்பத்தியை அதிகரிக்க ரூ.1.6 கோடி செலவில் சிறப்பு திட்டம்
- முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.10 கோடியில் முந்திரி வாரியம் அமைக்கப்படும்.
- பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.
- பலா மேம்பாட்டு இயக்கத்திற்காக ரூ.3.75 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- வெண்ணை பழ உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- சிறிய வகை வேளாண் கருவிகளுக்கான மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு.