அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால் அதை மக்களுக்காக செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால் மட்டுமே ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும்.
ஜெயலலிதாவும் மோடியும் நல்ல நண்பர்கள். பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக ‘மோடியா லேடியா?’ என்று ஜெயலலிதா பேசியதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவால் மட்டுமே ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும் என டிடிவி தினகரன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.