Friday, March 14, 2025

IPL 2025 ‘மிஸ்’ செய்யும் 6 ‘Costly’ வீரர்கள்..

இன்னும் ஒரே வாரத்தில் 18வது IPL தொடர் ஆரம்பமாகிறது. மார்ச் 22ம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி, ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

புதிய கேப்டன் ரஹானே தலைமையில் இந்த தொடரை KKR எதிர்கொள்கிறது. இன்னும் கோப்பையை வெல்லவில்லை என்பதால், முதல் போட்டியில் இருந்தே RCB அடித்து ஆடுவார்கள் என, எதிர்பார்க்கப் படுகிறது.

அத்துடன் இந்த தொடரில் ஏகப்பட்ட அணிகள் தங்களது கேப்டனை மாற்றி விட்டன. எனவே இந்த வருடம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சண்டை, சச்சரவுகள் இருக்கலாம். இந்தநிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடரின் முதல் பாதியை, 6 வீரர்கள் மிஸ் செய்யலாம் என, நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் பார்முக்கு வரத்துடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல தான் இந்த IPL இருக்கப்போகிறது. அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, முதுகுவலி காரணமாக முதல் பாதி போட்டிகளில் இடம்பெற மாட்டாராம்.

இதேபோல கடந்த தொடரில் பந்துவீச நேரம் எடுத்துக்கொண்டதால், BCCI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 1 போட்டிக்கு தடை விதித்துள்ளது. இதனால் சென்னையுடனான முதல் போட்டி மும்பைக்குக் கடினமானதாகவே இருக்கும்.

சென்னை அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நடப்பு சீசனில் Uncapped Player ஆக களம் காணுகிறார். இதனால் பிளெயிங் லெவனில் அவர் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சீசனில் சென்னைக்கு விக்கெட் கீப்பராக, ருதுராஜ் தான் செயல்படப் போகிறாராம்.

ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், நடப்பு தொடரை பஞ்சாயத்துகளுடன் தான் தொடங்கவுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இருவரும் காயம் காரணமாக, தொடரின் முதல் பாதி போட்டிகளை மிஸ் செய்கின்றனர்.

இதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சம்பவம் செய்த கே.எல்.ராகுல், தொடரின் சில போட்டிகளை மிஸ் செய்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்கலாம் என தெரிகிறது. இதன் காரணமாக டெல்லி அணியில் ராகுல் லேட்டாகத் தான் இணைவார்.

இதன் காரணமாக இந்த IPL தொடரின் முதல் பாதி ரசிகர்களுக்கு வெகுவாக போரடிக்கக் கூடும். என்றாலும் களத்தில் King கோலி இருப்பதால், ரசிகர்கள் இலவசமாக சில Fight சீன்களை பார்த்து ரசிக்கவும், வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

Latest news