Saturday, March 15, 2025

IPL 2025 CSK ‘பிளேயிங் XI’ இதான் Ex ‘கேப்டனுக்கு’ இடமிருக்கா?

10 அணிகள் முட்டி மோதிக்கொள்ளும் IPL தொடர் மார்ச் 22ம் தேதி ஈடன் கார்டனில் தொடங்குகிறது. 23ம் தேதி ஆளுக்கு 5 கோப்பைகளை வைத்திருக்கும் சென்னை-மும்பை அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.

இந்த தொடருடன் தோனி ஓய்வு பெறலாம் என தெரிகிறது. இதனால் வெற்றிக் கோப்பையுடன் அவரை வழியனுப்ப, புயல்வேகத்தில் சென்னை தயாராகி வருகிறது. IPLஐ பொறுத்தமட்டில் அதிக முறை பிளே ஆப்க்கு சென்ற அணியாக சென்னை திகழ்கிறது.

இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 17 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர். வேறு எந்த அணிக்கும் கிடைத்திராத பெருமையிது. நடப்பு சீசனில் Uncapped பிளேயர் ஆக முன்னாள் கேப்டன் தோனியை அந்த அணி தக்க வைத்துள்ளது.

இந்தநிலையில் சென்னையின் பிளேயிங் லெவனில், தோனி இடம்பெற மாட்டார் என்று, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஓபனர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா இறங்க இருக்கின்றனராம். காயம் காரணமாக டெவன் கான்வே நடப்பு சீசனில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

ஒன் டவுனில் ராகுல் திரிபாதி, 4வது வீரராக ‘ஆறுச்சாமி’ சிவம் துபே, 5வது இடத்தில் தீபக் ஹூடா அல்லது விஜய் சங்கர் இருவரில் ஒருவர் இறங்கலாம். 6வது பேட்ஸ்மேனாக ‘சுட்டிக்குழந்தை’ சாம் கரண், 7வது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜா களமிறங்கலாம்.

மீண்டும் தாய்க்கழகத்துக்கு திரும்பி இருக்கும் அஸ்வின் 8வது வீரராகவும், 10 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கான் வீரர் நூர் அஹ்மது, 9வது இடத்திலும் இறக்கப்படலாம். இலங்கை பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா 10வது இடத்திலும், மற்றொரு பந்துவீச்சாளர் கலீல் அஹமது 11வது வீரராகவும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.

முழங்கால் வலியால் அவதிப்படுவதால் தோனிக்கு ஓய்வு கொடுக்க, அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். இதனால் நடப்பு கேப்டன் ருதுராஜே விக்கெட் கீப்பர் பணியையும் மேற்கொள்ள உள்ளாராம். அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாவிட்டாலும், Impact வீரராக தோனி இறங்குவார் என்று கூறப்படுகிறது.

Latest news