2025-26ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் காலை தாக்கல் செய்தார். இதில் மகளிர் உரிமை தொகை, தொல்லியல் அகழாய்வுகள்,அருங்காட்சியகங்கள், கிராம சாலை மேம்பாடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கும்.
தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டங்களை விளக்குகிறது இந்த பதிவு.
* சென்னைக்கு அருகே 20 ஏக்கர் பரப்பளவில் உலக தர வசதியுடன் புதிய நகரம் உருவாக்கப்படும்.
* புதிதாக 1125 மின்சார பேருந்து இயக்கப்படும். அதில் சென்னைக்கு மட்டும் 950 பேருந்துகள் ஒதுக்கப்படும்.
* பூந்தமல்லி முதல் போரூர் வரை டிசம்பர் மாதத்துக்குள் புதிதாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
* ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
* 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு பேருந்துகளாக மாற்றப்படும்.
* நடமாடும் மருத்துவ வாகனத்துக்காக 40 கோடி.
* உலகத் தமிழ் ஒலிம்பியாட்க்காக ரூ.1 கோடி பரிசுத்தொகை.
* தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்.
* இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகத்துக்காக ரூ.21 கோடி.
* ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகத்துக்கு ரூ.22 கோடி.
* எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்க 40 கோடி ஒதுக்கீடு.
* கலைஞர் கனவு இல்லம் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் 25,000 புதிய வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு.
* திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.400 கோடி ஒதுக்கீடு.
* சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டத்திற்கு 2,423 ரூபாய் ஒதுக்கீடு.
* 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்புக்காக ரூ.675 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அதாவது Sponge Park அமைக்க ரூ.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவு செய்யப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
போன்ற பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன…