வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜவாஹிருல்லாவின் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.