Friday, March 14, 2025

மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவு கட்டணம் குறைக்கப்படும்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2.40 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திரப்பதிவுகளுக்கு இது பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Latest news