2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று முடிந்துள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். பட்ஜெட் தாக்கல் நடப்பதற்கு முன்பு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவர் பேசியதாவது : பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்ன ஆனது? ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டது. டீசல் விலை குறைக்கப்படவில்லை.
மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ரேஷனில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.