Friday, March 14, 2025

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்

2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்காக சுமார்10 கோடி ரூபாயில் அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்படி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Latest news