Friday, March 14, 2025

3-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், பள்ளிக்கு செல்வதற்காக 3-ம் வகுப்பு மாணவி ஒருவர் சாலையோரம் நின்றிருந்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கண்ணன் என்ற இளைஞர், சிறுமியை பள்ளியில் விடுவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.

பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில், கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

Latest news