2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
கவனத்தை ஈர்த்த முக்கிய விஷயங்கள்
இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் கட்டப்படும்.
ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ரூ13,807 கோடி நிதி ஒதுக்கீடு! இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை.
காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்.
2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும்.
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 6100 கி.மீ. நீளம் அமைக்கப்படும். இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு.
கலைஞர் கனவு இல்லம் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.