Friday, March 14, 2025

தமிழக பட்ஜெட் 2025 : சென்னைக்கான திட்டங்கள் என்னென்ன?

2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.

சென்னைக்கான திட்டங்கள் என்னென்ன?

கொருக்குப்பேட்டையில் ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)!

ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்!

வேளச்சேரியில் புதிய பாலம்! ரூ.310 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயனடைவார்கள்.

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும்.

மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும்.

நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும்.

Latest news